சீனாவின் சினோவாக் கொரோனா தடுப்பூசியை பெற பல நாடுகள் ஒப்பந்தம்!
உக்ரைன், இந்தியா, துருக்கி, தாய்லாந்து, மெக்சிகோ, ஐக்கிய அரபு நாடுகல் சீன தடுப்பூசி பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் ஆனது முதன்முதலில் சீனாவின் ஹூகான் மாகாணத்தில் தான் தோன்றியது. அதனைத் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கிய நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சீனா தடுப்பூசியை விநியோகம் செய்வதற்கு சீன அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி பல நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது எகிப்தில் இந்த தடுப்பூசி 4 கட்ட சோதனைகளுக்குப் பிறகு மிகவும் பாதுகாப்பானது என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எகிப்து சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் அரசு 12,000 தடுப்பூசிகளை பெற இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன், இந்தியா, துருக்கி, தாய்லாந்து, மெக்சிகோ, ஐக்கிய அரபு நாடுகல் சீன தடுப்பூசி பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.