எனக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் தயங்குகிறார்கள் நடிகர் அப்புக்குட்டி வருத்தம் !
வெண்ணிலா கபடி குழு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் நடிகர் அப்பு குட்டி.அதனை தொடர்ந்து அவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் “அழகர் சாமியின் குதிரை” படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் அந்த படத்திலும் பல கதாநாயகிகள் அவருக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று கூறியதாகவும் இயக்குநர் சுசீந்திரன் கூறியிருந்தார்.இந்நிலையில் இவர் தற்போது நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு “வாழ்க விவசாயி” படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை வசுந்தரா கஷ்யப் நடித்துள்ளார்.
இது குறித்து பேசிய அப்பு குட்டி ,என்னுடன் நடிக்க பல நடிகைகள் தயங்குகிறார்கள்.நான் நடிகன் இல்லையா ? என்னையும் ஒரு நடிகனாக நீங்கள் ஏற்று கொள்ள கூடாதா?.இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த வசுந்தரா கஷ்யப்பை பாராட்டுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.இனிமேல் என்னுடன் நடிக்க பல நடிகைகள் முன் வருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.