காலத்தை வார்ப்பதில் மனிதரின் பங்குமுண்டு – வைரமுத்து..!!
கவிஞர் வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் சித்திரை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவதுண்டு. புத்தாண்டை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவதுண்டு. ஒவ்வொருவரும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறி, வீடுகளில் விஷேசமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டை கொண்டாடும் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் “ஆளும் வாளும் அறத்தொடு நின்றால்நாளும் கோளும் என்செய்யும்? மனிதரை வார்ப்பதில் காலத்தின் பங்குமுண்டு காலத்தை வார்ப்பதில் மனிதரின் பங்குமுண்டு காலத்தை வார்த்தெடுங்கள் சித்திரை வாழ்த்துக்கள்”. என்று ட்வீட் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஆளும் வாளும்
அறத்தொடு நின்றால்
நாளும் கோளும்
என்செய்யும்?மனிதரை வார்ப்பதில்
காலத்தின் பங்குமுண்டு;
காலத்தை வார்ப்பதில்
மனிதரின் பங்குமுண்டு.காலத்தை வார்த்தெடுங்கள்;
சித்திரை வாழ்த்துக்கள்.— வைரமுத்து (@Vairamuthu) April 14, 2021