விவாகரத்திற்கு பிறகு திலீப்புடன் நடிக்க மறுத்த மஞ்சு வாரியர்.!
- திலீப் அளித்த பேட்டியில், மஞ்சு வாரியர் மீது எனக்கு கோபம், விரோதம் இல்லை. பொருத்தமான கதை அமைந்தால் அவருடன் சேர்ந்து நடிப்பேன் என கூறினார்.
- திலீப் கனவில் வேண்டுமானால் என்னுடன் நடிக்கலாம்.ஆனால் நிஜத்தில் அது நடக்கவே நடக்காது அவருடன் நடிக்க மாட்டேன் என கூறினர்.
மலையாளத்தில் மஞ்சுவாரியர் முன்னணி நடிகைகளில் ஒருவர்.இவர் சமீபத்தில் தமிழில்நடித்த “அசுரன் “திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.கடந்த 1998-ம் ஆண்டு நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் ஒருவர் உள்ளார்.
பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து திலீப் காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் திலீப் கூலிப்படையை ஏவி ஒரு நடிகையே கடத்திய புகாரில் 85 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன் திலீப் அளித்த பேட்டியில், மஞ்சு வாரியர் மீது எனக்கு கோபம், விரோதம் இல்லை. பொருத்தமான கதை அமைந்தால் அவருடன் சேர்ந்து நடிப்பேன் என கூறினார்.
இதை தொடர்ந்து ஒரு மலையாள தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த மஞ்சுவாரியர், திலீப் கனவில் வேண்டுமானால் என்னுடன் நடிக்கலாம்.ஆனால் நிஜத்தில் அது நடக்கவே நடக்காது அவருடன் நடிக்க மாட்டேன் என கூறினர்.