மணிப்பூர் விவகாரம்… எதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை ஒத்திவைப்பு.!
மக்களவையில் இன்று நான்காவது நாளாக அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நிச்சயம் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் இன்று தொடங்கிய மக்களவையிலும் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அவை தொடங்கும் முன் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.