கர்நாடக மாநிலம் மங்களூர் அருகில் இந்த தெட்சிணா கன்னடா மாவட்டத்தில் பெல்தங்கடி தாலுகாவில் அமைந்துள்ளது இந்த மஞ்சுநாதர் திருக்கோயில். இந்த கோயில் தர்மஸ்தாலா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கோயில் பல வருடங்களுக்கு முன்னர் இருந்த இடம் குடுமபுரம் என அழைக்கபடுகிறது. இந்த ஊர் தலைவராக இருந்த பராமண்ணா ஹெக்ட என்பவர் பெரிய குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்.
அப்போது தர்மம் தேவதைகள் இவர்கள் வீட்டிற்கு மாறுவேடத்தில் வந்து குடிக்க சிறிது தண்ணீர் கேட்டுள்ளனர். அவரும் கொடுத்துள்ளார். பின்னர் நாங்கள் இந்த வீட்டில் தங்கிக் கொள்கிறோம் நீங்கள் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என மாறுவேடத்தில் வந்த தர்மதேவன் கூறியுள்ளனர். உடனே அவர்களும் சரி என தங்களது பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற புறப்பட்டனர்.
அதன்பின்னர் மாறுவேடத்தில் இருந்த தர்ம தேவதைகள் பராமண்ணா காட்சி அளித்து நாங்கள் ஈசனின் ஆணைப்படி உங்களுக்கு சோதனை செய்ய அனுப்பப்பட்ட தர்மதேவதைகள் ஆவர். நீங்கள் பிற்காலத்தில் சிவனுக்கு என்று தனிக்கோயில் எழுப்பி அதனை நிர்வகித்து மக்களுக்கு நல்லதை உங்கள் பரம்பரை செய்யவேண்டுமென கூறியுள்ளனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிற்காலத்தில் மஞ்சுநாதர் சிலையையும், கன்னியாகுமரி அம்மன் சிலையையும், தரும தேவதைகளின் சிலையையும் நிறுவி பிரம்மாண்ட கோவில் கட்டி நிறுவி, அச்சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்து வருகின்றனர்.
அங்கு வரும் பக்தர்கள் தரும் காணிக்கையை கொண்டு பொதுமக்களுக்கு நல்ல காரியங்களுக்கு செய்ய செலவழிக்க வேண்டும் எனவும், தர்ம தேவதைகள் கூறியுள்ளனர். அந்த பரம்பரையில் தற்போது வரை அந்த காரியத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். மனநிலை சரியில்லாதவர்கள், பில்லி சூன்யம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிசாசு பிடித்தவர்கள் இவர்கள் எல்லாம் இந்த கோவிலில் வந்து ஒரு வாரம் தங்கியிருந்து ஈசனை வழிபட்டு சென்றால் அவர்கள் பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்பது இங்குள்ள நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…