சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெறவுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டலக் கால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டு, 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. 41 நாட்களாக நடைபெறும் இந்த மண்டலபூஜை, இன்றுடன் நிறைவுபெறுகிறது.
தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி வார நாட்களில் 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. பக்தர்கள் வருகைக்கான எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக்கொண்டு வந்த நிலையில், வார நாட்களில் 2,000 பேரும், சனி, ஞாயிறுகளில் 3,000 பேரும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், பக்தர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்தி கேரள நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த மண்டல பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி பத்தனம் திட்டா மாவட்டம், ஆரனமுளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாகச் சபரிமலைக்குப் புறப்பட்டு, நேற்று மதியம் பம்பை வந்தடைந்தது. அங்கிருந்து 3 மணிக்கு மீண்டும் ஊர்வலமாகப் புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை அடைந்து பின்னர் ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டது. அதனையடுத்து தீப ஆராதனை நடைபெறும். அதனைதொடர்ந்து இன்று 11.40-12.20 இடையே பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்று, இரவு 9 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும்.
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…