இன்று நடைபெறுகிறது சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெறவுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டலக் கால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டு, 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. 41 நாட்களாக நடைபெறும் இந்த மண்டலபூஜை, இன்றுடன் நிறைவுபெறுகிறது.
தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி வார நாட்களில் 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. பக்தர்கள் வருகைக்கான எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக்கொண்டு வந்த நிலையில், வார நாட்களில் 2,000 பேரும், சனி, ஞாயிறுகளில் 3,000 பேரும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், பக்தர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்தி கேரள நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த மண்டல பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி பத்தனம் திட்டா மாவட்டம், ஆரனமுளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாகச் சபரிமலைக்குப் புறப்பட்டு, நேற்று மதியம் பம்பை வந்தடைந்தது. அங்கிருந்து 3 மணிக்கு மீண்டும் ஊர்வலமாகப் புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை அடைந்து பின்னர் ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டது. அதனையடுத்து தீப ஆராதனை நடைபெறும். அதனைதொடர்ந்து இன்று 11.40-12.20 இடையே பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்று, இரவு 9 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !
February 26, 2025
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025
AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
February 26, 2025
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
February 26, 2025