“Man Vs Wild” நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம் -ரஜினிகாந்த் ட்வீட்
டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சியான மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.இதற்கான படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பண்டிபுர் புலிகள் காப்பகத்தில் (Bandipur Tiger Reserve) நடைபெற்ற நிலையில் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சி மேன் vs வைல்ட் . இந்த நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கி வருகிறார்.இவர் காடு , வன உயிரினங்கள் மற்றும் வன விலங்குகளின் குணங்களை பற்றி விளக்கி வருகிறார்.காட்டுக்குள் நாம் சிக்கி கொண்டால் காட்டில் எப்படிஉயிர் பிழைப்பது ,எப்படி காட்டுக்குள் உயிர் வாழ்வது போன்றவை பற்றி இந்த நிகழ்ச்சி மூலம் விளக்கி வருகிறார்.
கடந்த ஆண்டு இந்த மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி , பியர் கிரில்ஸ் உடன் காட்டுக்குள் பயணம் மேற்கொண்டார்.இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடியை போல பியர் கிரில்ஸியுடன் “மேன் vs வைல்ட்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பண்டிபுர் புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது .
Thank you very much dear @BearGrylls for an unforgettable experience … love you. @DiscoveryIN thank you ???????? #IntoTheWildWithBearGrylls
— Rajinikanth (@rajinikanth) January 29, 2020
இந்நிலையில் இது குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம். டிஸ்கவரி சேனலுக்கும், நிகழ்ச்சி தொகுப்பாளர் பேர் கிரில்ஸூக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.