ஊரடங்கு நேரத்திலும் McDonald’s-ல் சாப்பிட ஆசைப்பட்ட நபர்.. காவலர்கள் கொடுத்த அன்பு பரிசு!
இங்கிலாந்தை சேர்ந்த 34 வயதான நபர் ஒருவர், ஊரடங்கு நேரத்தில் McDonald’s-ல் சாப்பிட ஆசைப்பட்டு 160 கி.மீ. பயணித்தால் அந்நாட்டு போலீசார், 200 பவுண்ட்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.19,926 வரை) அபராதம் விதித்து, அவரின் காரையும் பறிமுதல் செய்தனர்.
உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, சில தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.
அந்தவகையில், இங்கிலாந்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலே இன்னும் குறையாத நிலையில், பிரிட்டனில் புதிய வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியது. அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விதிக்கப்பட்ட ஊரடங்கில் பலரும் ஒரு நேர உணவுக்காக கஷ்டப்படும் நிலையில், லூட்டனை சேர்ந்த 34 வயதான நபர் ஒருவர், McDonald’s-ல் சாப்பிட ஆசைப்பட்டார்.
அதற்காக அவர், தான் இருக்கும் லூட்டனில் இருந்து தனது காரை எடுத்துக்கொண்டு வழியில் ஏதாவது McDonald’s இருக்குமா என பார்த்துக்கொண்டே 160 கி.மீ. தொலைவில் இருக்கும் தேவிஜஸ் நகர் வரை வந்தடைந்தார். ஊரடங்கு நேரம் என்பதால், அங்கு வந்த அவரை வழிமறித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினார். அப்பொழுது அவர் McDonald’s-ஐ தேடி வந்ததாக கூறினார். இதன்காரணமாக ஊரடங்கு விதிகளை மீறியதாக அவருக்கு 200 பவுண்ட்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.19,926 வரை) அபராதம் விதித்து, அவரின் காரையும் பறிமுதல் செய்தனர்.
A man who drove from Luton to Devizes for a McDonald’s on Thursday night was handed a £200 fixed penalty notice & their vehicle was seized.
We ask you to please stick to the rules at such a crucial time in this pandemic to protect the NHS.
Full story ➡️ https://t.co/ukb0IaooAg pic.twitter.com/cvDe86og0G
— Wiltshire Police (@wiltshirepolice) January 16, 2021