“நான் கொரோனாவை பரப்பப்போகிறேன்”- குழந்தைகள் உட்பட 22 பேருக்கு கொரோனாவை பரப்பிய நபர்!
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அலுவலகம் மற்றும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று, 22 பேருக்கு கொரோனா தொற்றை பரப்பியுள்ளார்.
உலகலைவில் கொரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் ஸ்பெயின் நாட்டில் இதுவரை 3,468,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அந்நாட்டில் 77,591 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில், மல்லோர்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருந்தது. இதனையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
வழக்கமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அவர்கள் தனிமையில் இருப்பார்கள். ஆனால் அந்த நபர், கொரோனா முடிவுகள் வரும் வரை தனிமையில் இல்லாமலும், கொரோனா முடிவுகள் வரும் வரை காத்திருக்காமலும் இருந்தார். கொரோனா பரிசோதனை மேற்கொண்ட அடுத்த நாள் காலை அவர் வழக்கம்போல உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றார். அதன்பின் அவர் தனது அலுவகத்திற்கு சென்றார்.
அங்கு அவருக்கு வெப்பப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு 104 டிகிரி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை வீட்டிற்கு செல்லுமாறு அலுவலக மேலாளர் மற்றும் ஊழியர்கள் வலியுறுத்தினார்கள். அவர்களின் பேச்சை இந்த காதில் வாங்கி அந்த காதில் வெளிவாங்கிய அந்த நபர், முகமூடியை கழற்றி “நான் உங்களுக்கு கொரோனாவை பரப்பிவிடப்போறேன்” என்று நக்கலாக பேசினார்.
அவரின் முடிவுகள் வந்தபோது அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நபரின் தொடர்பில் இருந்த அவரின் 3 வயது குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் ஜிம், அலுவலகத்தில் தொடர்பில் இருந்த 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.