மங்கோலியாவில் பரவும் பிளேக் தொற்று.. 42 வயது நபர் உயிரிழப்பு!

Default Image

மங்கோலியாவில் புதிதாய் பரவதொடங்கிய “பிளேக்” நோய் தொற்றால் 42 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், வடசீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் புதிதாய் ஒரு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. “பிளேக்” எனும் அந்த புதிய வகை வைரஸ், தற்பொழுது வடசீனாவில் பரவிவருகிறது.

“மர்மோட்” எனப்படும் ஒருவகை அணிலின் கறியை சாப்பிட்டதால், அந்த வைரஸ் பரவியது என கூறப்படுகிறது. அதன்காரணமாக, மர்மோட் அணில் இறைச்சியை சாப்பிடவேண்டாம் என மக்களிடம் அந்நாட்டு அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தது வருகிறது. ஆயினும் பலர் அதனை மீறி, அணில்கறியை உண்டு வருகின்றனர்.

அந்தவகையில், மேற்கு மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தில் நேற்று 42 வயதான நபர் ஒருவர், இந்த புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மங்கோலியாவில் இதுவரை 12 பேருக்கு புபோனிக் பிளேக் தொற்று கண்டறியப்பட்டது. அதில் மேற்கு மங்கோலியாவின் கோவி-அல்தாய் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம், 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

மேலும், மங்கோலியாவில் உள்ள 21 மாநிலங்களில், 17 இடங்களில் புபோனிக் பிளேக் தொற்று அபாயம் இருப்பதாக அந்நாட்டின் ஜூனோடிக் நோய்களுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இதற்கான அறிகுறிகள், மூச்சுத்திணறல், தீவிர காய்ச்சலே ஆகும். மேலும் இதை கவனிக்கவில்லை என்றால் அந்த வைரஸ் தொற்று, சம்பந்தப்பட்ட நபருக்கு 24 மணி நேரத்தில் உடல் முழுக்க பரவி, உயிரிழக்க வாய்ப்புள்ளகாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்