தனது உறவினர்கள் குடும்பத்தில் பிடித்திருக்கும் பிசாசை ஓட்டுவதற்காக அண்டை வீட்டுப் பெண்ணின் இதயத்தை எடுத்து உருளைக்கிழங்குடன் சமைத்து சாப்பிட்ட அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா எனும் நகரை சேர்ந்த லாரன்ஸ் பால் என்பவர் தனது அண்டை வீட்டில் உள்ள ஒரு பெண்ணை கொலை செய்து அந்தப் பெண்ணின் இதயத்தை எடுத்து சென்றுள்ளார். பின் அதை தனது உறவினர் வீட்டிற்கு கொண்டு சென்று வேகவைத்த உருளைக் கிழங்குடன் சேர்த்து சமைத்து அதை தனது பேத்தி, மனைவி மற்றும் உறவினர்களுக்கு கொடுத்து தானும் சாப்பிட்டுள்ளார். ஆனால் நரமாமிச மனம் குமட்டியதால் உறவினர் குடும்பத்தினர் இந்த இருதய உணவை சாப்பிட மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ் பேத்தி, மனைவி உறவினர் என குடும்பத்தினரை சரமாரியாக அடித்ததில் உறவினர் ஒருவரும் அவரது பேத்தியும் உயிரிழந்துள்ளனர்.
பயத்தில் அவ்விடத்திலிருந்து லாரன்ஸ் தப்பி ஓடியுள்ளார். பக்கத்துக்கு வீட்டிலுள்ளவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்து நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்ததுடன், போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் லாரன்சை தேடி கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி உள்ளனர். உறவினர் குடும்பத்தினருக்கு பிசாசு பிடித்த இருந்ததாகவும் அதை ஓட்டுவதற்காக தான் இவ்வாறு ஒரு பெண்ணின் இதயத்தை எடுத்து சமைத்து கொடுத்ததாகவும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…