மின்னலை தோற்கடிக்கும் போர்வீரனாக மம்முட்டி! மலையாள சினிமாவின் சரித்திர பிரமாண்டம் மாமாங்கம் ட்ரெய்லர் தமிழில் இதோ!
தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடித்து வரும் சரித்திர பிரமாண்ட திரைப்படம் மாமாங்கம். இப்படத்தை எம்.பத்மகுமார் என்பவர் இயக்கி வருகிறார். காவ்யா கம்பெனி சார்பாக வேணு குன்னபில்லி என்பவர் தயாரித்து வருகிறார். இப்படம் கி.பி.1695 ஆம் ஆண்டு நடைபெறும் சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
மார்ஷல் ஆர்ட்ஸ் கலையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே மலையாளத்தில் ரிலீசாசானது. அதற்க்கு கேரள ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது.
தற்போது இந்த டீசர் தமிழிலும் வெளியாகியுள்ளது. தற்போது வெளியான டீசரில் பிரம்மாண்ட போர்க் காட்சிகள், சண்டைக்காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களை கவரும்படி அமைந்துள்ளதால் தற்போது இணையத்தில் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் டீசர் வைரலாகி வருகிறது.