பாலிவுட்டில் ரவி உதயவர் இயக்கத்தில் சித்தாந்த் சதுர்வேதிக்கு ஜோடியாக ஒரு ஆக்ஷன் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகனன். கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் அவர் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மாளவிகா மோகனனுக்கு பாலிவுட்டில் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இவர் மஜித் மஜிடி இயக்கத்தில் ஒரு சர்வதேச திரைப்படம் ஒன்றில் நடித்திருந்தாலும் தற்போது ஒரு ஆக்ஷன் படம் மூலம் பாலிவுட்டில் களமிறங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை மறைந்த பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் Mom என்ற படத்தை இயக்கிய ரவி உதயவர் இயக்கவுள்ளார். மாளவிகா மோகனனுக்கு ஜோடியாக சித்தாந்த் சதுர்வேதி நடிக்கவுள்ளார். இவர் ரன்வீர் சிங் நடித்த குல்லிபாய் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…