தனுஷுடன் மாளவிகா மோகனன்… வைரலாகும் #D43 ஸ்டில்ஸ்..!
தனுஷ் 43 வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் இணைந்துள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தில் நடித்து வருகிறார்.இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் இன்றுடன் முடிவடைந்துள்ளது. அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
The #D43 duo. @dhanushkraja @MalavikaM_ ???????? pic.twitter.com/Q1SsusInG8
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) February 7, 2021