கொரோனாவால் உணவுப்பற்றாக்குறை! ஆமையை உணவாக உட்கொள்ள சொல்லும் வடகொரிய அரசு!

Default Image

உணவுப்பற்றகுறையால் ஆமையை உட்கொள்ள சொல்லும் வடகொரியா அரசு.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மேற்கொண்டுவந்த அணுஆயுத நடவடிக்கைகளால் அந்நாட்டுக்கு ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளது. இப்போது கொரோனா பரவலால் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு வாழும் மக்கள் கடும்பசிக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து, அங்கு வாழும் மக்களின் பசியை போக்குவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ள நிலையில்,  டெர்ராபின் எனப்படும் ஆமை வகை நல்ல சுவை மற்றும் ஊட்டச்சத்து கூறுகளுக்காக உயர் ரக உணவுகளை தயாரிப்பதில் பயன்படுத்தப்பட்டது எனவும், இந்த உணவை மக்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ஹெபடைடிஸ், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற நோய்களைக் குணப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வடகொரிய அரசு, ஆமையை உட்கொள்ள அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது,  மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
Suriya
Pollachi Sexual Assault case
edappadi palanisamy rs bharathi
Supreme court - Senthil Balaji
suryakumar yadav vk orange cap
Omar Abdullah About Pahalgam Attack