இந்தியா வருத்தம்!மாலத்தீவில் நிலவும் அரசியல் நெருக்கடி குறித்து கருத்து ….
இந்தியா கூறியது, மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி வருத்தத்தைத் தருவதாக தெரிவித்துள்ளது.
மாலத்தீவில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்கவும், 12 எம்பிக்களின் தகுதி நீக்கத்தை ரத்து செய்தும், அதிபர் யாமீனின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இரண்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டதுடன், அவசர நிலையும் பிரகடனப் படுத்தப்பட்டது. மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி வருத்தமளிப்பதாகவும், அங்கு ஏற்பட்டு வரும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என இலங்கையில் தஞ்சமடைந்துள்ள மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.