இந்தியாவிற்கு தூதரை அனுப்ப தயங்கும் மாலத்தீவு!
மாலத்தீவு அரசு, தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்த தகவல்களை தெரிவிப்பதற்காக இந்தியாவை தவிர்த்து மற்ற நட்பு நாடுகளுக்கு தூதர்களை அனுப்பி வைக்கிறது.
சிறையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தனது ஆட்சி பறிபோய் விடுமோ என்று எண்ணிய அதிபர் அப்துல்லா யாமின், நீதிபதிகளை கைது செய்ததுடன் அவசர நிலைப் பிரகடனத்தைக் கொண்டு வந்துள்ளார்.
இந்த அரசியல் குழப்பங்கள் நீடித்து வரும் சூழலில் தற்போதைய நிலவரங்கள் குறித்த தகவல்களை தெரிவிப்பதற்காக நட்பு நாடுகளான சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியாவுக்கு மாலத்தீவு அரசு தூதர்களை அனுப்பி வைக்கவுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா இல்லை. ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட முன்னாள் அதிபர் முகமது நஷீத்துக்கு இந்தியா உதவக் கூடும் என்பதால், இந்த முடிவை மாலத்தீவு அரசு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.