மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை சற்று நேரத்திற்கு முன் மலேசிய மன்னரிடம் கொடுத்துள்ளார். பிரதமர் மகாதீர் இரண்டு முறை மலேசியா பிரதமராக இருந்து உள்ளார்.
இவர் யுனைடெட் மலாய்ஸ் தேசிய அமைப்பு கட்சியில் இருந்தார். கடந்த 1981லிருந்து 2003-ம் ஆண்டு வரை நான்காம் பிரதமராகப் பணியாற்றினார். பின்னர் 2003-ம் ஆண்டு யுனைடெட் மலாய்ஸ் கட்சியில் இருந்து விலகினார். இதையெடுத்து கடந்த 2016-ம் ஆண்டு பெர்சாத்து என்ற கட்சியை தொடங்கினர்.
இந்நிலையில் மலேசியாவில் கடந்த 2018-ம் ஆண்டு ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு இடையில் தேர்தலை சந்தித்த மகாதீர் வெற்றிபெற்றார். இவர் இந்த தேர்தலில் மற்றொரு அரசியல் தலைவரான அன்வர் இப்ராஹிம் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தார். இதனால் 7-வது பிரதமராகப் பணியாற்றினார். மகாதீர் உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பை பெற்றார். மகாதீருக்கு வயது 95 .
தற்போது மகாதீர் மொஹமத் பதவி விலக்கியதால் மலேசியாவில் மீண்டும் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…