அதிக வெப்பநிலை உள்ளவர்களை அடையாளம் காண ட்ரோன்களை பயன்படுத்தும் மலேசியா காவல்துறை…!
- மலேசியாவில் பொது இடங்களில் அதிக வெப்பநிலை கொண்டவர்களை அடையாளம் காண்பதற்காக காவல்துறையின் ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர்.
- ட்ரோன்கள் அதிக வெப்பநிலை கொண்ட நபரை கண்டவுடன் சிவப்புநிற எச்சரிக்கை ஒலியை வெளியிடுகிறது.
கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இவைரஸை தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பல நாடுகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. மேலும், மலேசியா நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட யோசனையை மலேசிய காவல்துறை கையாளுகிறது. ட்ரோன்களை தொலைவில் புகைப்படம் எடுக்க, செயல்களை கண்காணிக்க தான் பயன்படுத்தினர்.
ஆனால், மலேசியாவில் பொது இடங்களில் அதிக வெப்பநிலை கொண்டவர்களை அடையாளம் காண்பதற்காக காவல்துறையின் ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர். பாதுகாப்பான தொலைவிலிருந்து வெப்பநிலையை சரிபார்க்க இந்த ட்ரோன்களை காவல்துறையினர் பயன்படுகின்றனர்.
இவை தரையிலிருந்து 20 மீட்டர் உயரத்தில் இருந்து, அதிக வெப்பநிலையை கண்டறியும். அதிக வெப்பநிலை கொண்ட நபரை கண்டவுடன் சிவப்புநிற எச்சரிக்கை ஒலியை வெளியிடுகிறது. அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இதனை கண்டவுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.