பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மலேசிய பிரதமர்…! நடந்தது என்ன..?
மலேசிய பிரதமர் முகைதின் யாசின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்.
கடந்த ஆண்டு பிரதமராக இருந்த மகாதீர் பதவி விலக்கியதையடுத்து, முகைதீன் யாசின் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், பிரதமர் முகைதின் யாசின் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பு கூட்டணியிலிருந்து விலகியது. இதனால் பிரதமர் முகைதின் யாசின் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது.
மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளும் அரசு பெரும்பான்மை இழந்தால் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதே. ஆனால், பிரதமர் முகைதீன் அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், அடுத்த மாதம் நாடாளுமன்றத்தை கூட்டி நிரூபிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவருக்கு பின் அன்வர் இப்ராகிம் பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.