கொரோனா வைரஸ் அச்சம்..மலேசியாவில் மீண்டும் ஊரடங்கு..!
கொரோனா வைரஸ் அச்சம் மலேசியாவில் மீண்டும் ஊரடங்கை அறிவிக்கப்பட்டது.
தென்கிழக்கு ஆசிய நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு நேற்றய நிலவரப்படி 135,000 ஆக அதிகரித்துள்ளதால், மலேசியாவின் பிரதமர் முஹைதீன் யாசின் தலைநகர் கோலாலம்பூரிலும் ஐந்து மாநிலங்களிழும் இரண்டு வாரம் ஊரடங்கு அறிவித்தார்.
இந்நிலையில், இரண்டு வார ஊரடங்கின் போது மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களும் தடைசெய்யப்படும் என்று முஹைதீன் கூறினார். ஆனால், கடுமையான விதிமுறைகளின் கீழ் ஐந்து அத்தியாவசிய துறைகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்று உறுதியளித்தார்.