மலேசியாவில் ஜூன் 7 ஆம் தேதி வரை 30 நாட்கள் முழு ஊரடங்கு..!

Default Image

கொரோனா தொற்று பரவல் காரணமாக மலேசியாவில் வருகின்ற மே 12 முதல் ஜூன் 7 ஆம் தேதி வரையுள்ள 30 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பானது கடந்த ஆண்டை விட தற்போது பல மடங்கு அதிகரித்து வருகின்றது.இதன்காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில்,மலேசிய நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மே 12 முதல் அடுத்த மாதமான ஜூன் 7 ஆம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் திங்களன்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து,உணவகங்களில் உணவருந்துதல்,மற்றும் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,அவசரநிலைகள்,மருத்துவ உதவி, மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் ஆகிய அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

மலேசியாவில்,இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,44,484 ஆக உயர்ந்துள்ளது.மேலும்,இதுவரை 1,700 பேர்கள் கொரோனாவால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்