துல்க்கர் சல்மான், மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். இந்த நிலையில் இவர் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான வரனே அவாஷ்யமுண்ட் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை படத்தை தற்போது ஆன்லைனிலும் வெளியிடப்பட்டுள்ளது.இதில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாயின் பெயர் பிரபாகரன் என்று வைத்து அழைக்கப்பட்டது. இந்த காட்சிக்கு தமிழ் மக்கள் மத்தியில் துல்க்கருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு நிலவி வந்தது மேலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். அதனையடுத்து அவர் தமிழ் மக்கள் அனைவரிடமும் தனது நியாயத்தை விளக்கி மன்னிப்பு கேட்டிருந்தார். மேலும் பல பிரபலங்கள் இவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். அந்த வகையில் கல்யாண சமையல் சாதம், நிபுணன், அச்சமுண்டு அச்சமுண்டு படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் துல்க்கருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், வரனை ஆவிஷமுண்டோ படத்தில் பிரபாகரனை தவறாக வேண்டுமென்றே சித்தரிக்கவில்லை, இந்த பிரச்சினை தேவையற்றது மலையாள படங்களில் தமிழர்களை மோசமான முறையில் சித்தரிப்பதாக பலர் கூறியுள்ளனர். அது முற்றிலும் தவறானது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியான கும்பளங்கி நைட்ஸ் திரைப்படத்தில் தமிழ் கதாபாத்திரத்தை மிகவும் கண்ணியமாக காட்டியுள்ளனர். ஆனால் பல தமிழ் திரைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட வழியில் உடையணிந்த மலையாள பெண்கள் மீது இழிவான கருத்துக்களை கொண்டு சித்தரித்துள்ளனர். ஒரு சில தமிழ் படங்களில் மலையாள நடிகையான ஷகீலாவை ஒப்பிட்டு வசனங்களும் உள்ளன.. மேலும் பிரபாகரன் என்று ஒரு நாய்க்கு பெயரிடப்படுவதால் ஏன் ஒருவர் புண்பட வேண்டும். அவர்களின் லாஜிக் படி பார்த்தால், என்ன கொடுமை சரவணா என்ற டயலாக் கடவுள் முருகனை கேலி செய்வதா, இது இந்த ஊரடங்கு காலத்தில் சலித்து இருக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட தேவையற்ற சர்ச்சையை தவிர வேறொன்றுமில்லை என்று கூறியுள்ளார்.
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…