தல அஜித்தின் வலிமை படத்தில் இணைந்த மலையாள நடிகர்.!
தல அஜித்தின் வலிமை படத்தில் பிரபல மலையாள நடிகரான துருவன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது .
மேலும் இந்த படத்தில் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும்,அம்மாவாக நடிகை சுமித்ராவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை .யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது வெளிநாடுகளில் நடத்த உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட வெளிவராத நிலையில் வலிமை படத்தின் முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிவடையும் என்றும் ,ஒரு ஸ்டண்ட் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளதாகவும்,விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்துள்ளதாகவும் போனி கபூர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதை தொடர்ந்து அதனை தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வலிமை படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் பிரபல மலையாள நடிகரான துருவன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் மலையாளத்தில் கியூன் , ஃபைனல்ஸ் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.