விஷாலுக்கு வில்லனாகும் மலையாள நடிகர் பாபுராஜ்..??
விஷாலின் 31 படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகரான பாபுராஜ் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.
நடிகர் விஷால் சக்ரா படத்தை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் தனது 31 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலிற்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். இந்த திரைப்படத்தை விஷால் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்திற்க்கான படப்பிடிப்புபடப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தில் நடிகர் விஷாலுற்கு வில்லனாக பிரபல மலையாள நடிகரான பாபுராஜ் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.