மலாவி : பாராளுமன்ற வளாகத்தில் முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை!

Default Image

மலாவி நாட்டின் முன்னாள் துணை சபாநாயகர் பாராளுமன்ற வளாகத்தில்  வைத்து தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தென் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி நாட்டில் 2019 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் துணை சபாநாயகராக செயல்பட்டவர் தான் செல்மெண்ட் ஷிவாலா. இவருக்கு 50 வயதாகிறது. மாற்றுத்திறனாளியான செல்மெண்ட் தனது பதவிக்காலம் முடிவடையும் நேரம் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் அந்த கார் சில மாதங்களில்  விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனை அடுத்து அந்த காரை சரி செய்யும் செலவை பாராளுமன்றம் ஏற்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் காருக்கான காப்பீட்டை அவர் புதுப்பிக்காததால், காலாவதி ஆகி உள்ளது. எனவே, காருக்கான செலவை ஏற்க முடியாது என பாராளுமன்றம் செல்மெண்ட் ஷிவாலா அவர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இதனையடுத்து நேற்று பாராளுமன்ற வளாகத்தில் சக்கர நாற்காலியில் வந்த செல்மெண்ட் ஷிவாலா தான் மறைத்துக் கொண்டு வந்த துப்பாக்கியால் பாராளுமன்ற வளாகத்தில் வைத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் போலீசாருக்கு தகவல் அளிதுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்மெண்ட் ஷிவாலா அவர்களின் உடலை கைப்பற்றி இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் பழுது பார்க்க ஆகும் செலவை பாராளுமன்றம் ஏற்க்காததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
vaibhavsuryavanshi
Zipline operator
Ajith Kumar Pahalgam attack
Rajasthan Royals WON
Vaibhav Suryavanshi