மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
விஜய் மற்றும் அஜித் இவர்களுக்கு அடுத்த இடத்தில் உயர்ந்து இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற தமிழ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் ‘Uppena’ படத்தில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார் . மேலும் இவர் காத்து வாக்குல ரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, கா/பெ ரணாசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார். அதனையடுத்து இந்தியில் லால் சிங் சத்தா என்ற படத்திலும், மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியருடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை பிரபல இயக்குநரான சசி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சொல்லாமலே, ரோஜா கூட்டம், பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்குகிறார் சசி. அதனையடுத்து விஜய் சேதுபதியை வைத்து படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் லாக்டவுன் முடிந்ததும் அதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…