மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹசானுக்கு உற்சாக வரவேற்பு!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹசானுக்கு திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாளை ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை கமல் சந்திக்க உள்ளார். இதற்காக கோவைக்கு சென்று அங்கிருந்து காரில் ஈரோடு சென்ற கமலுக்கு வழியில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வாகனத்தில் நின்ற படி பேசிய கமல்ஹாசனைக் கண்டதும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர்.
பின்னர் பேசிய கமல்ஹாசன், தான் முன் நடந்து, மற்றவர் பின் தொடர்வது அரசியல் அல்ல; அனைவரும் ஒன்று கூடி நடந்து வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். நல்ல நாடு வேண்டும் என்றால் அனைவரும் அரசியலில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.