நம்ம சாண்டி மாஸ்டர் தளபதி ஸ்டைலில் படு ஜோர்!
பிரபல நடன கலைஞரான சாண்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்த இவர் எப்போதுமே தன்னுடன் இருக்கும் அனைவரையுமே சிரிக்க வைத்துக் கொண்டே தான் இருப்பார். பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்ல, வெளியிலும் அவரது இயல்பான குணம் அதுதான்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தளபதி விஜயின் பிகில் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சாண்டி மாஸ்டர் தளபதி விஜயின் பிகில் பட ஸ்டைலில், பந்தை வைத்து நடனமாடியவாறு, குழுவாக உள்ள ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,