இனிமேல் சப்பாத்தியை இந்த மாதிரி செய்து சாப்பிடுங்க …!
காலையில் எப்பொழுதும் இட்லி, தோசை, பூரி அல்லது சப்பாத்தி தான் அதிகம் செய்து சாப்பிடுவோம். இவை தான் காலை உணவுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், இதையே எப்பொழுது செய்து சாப்பிடுவது பலருக்கும் சலித்து போயிருக்கும். எனவே இதற்கு மாற்றாக காலை நேரத்தில் சப்பாத்தியை வித்தியாசமான முறையில் எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- சப்பாத்தி
- கடலை மாவு
- முட்டை
- வெங்காயம்
- தக்காளி
- கொத்தமல்லி
- கருவேப்பில்லை
- பச்சை மிளகாய்
- சீரகம்
- எண்ணெய்
செய்முறை
தாளிப்பு : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் இதனுடன் தக்காளி தேவைப்படுபவர்கள் சேர்த்து கொள்ளவும், இல்லையென்றால் வேண்டாம். அதன் பின் மிளகாயை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
விழுது : பின் இதனுடன், மஞ்சள் தூள், உப்பு, கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக விழுது போல கிளறவும். பின்பு இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
முட்டை சப்பாத்தி : பின் தோசை கல்லில் சப்பாத்தியை வைத்து அதன் மேல் இந்த முட்டை கலவையை சேர்த்து இருபுறமும் நன்றாக அவிந்ததும் இறக்கி விடவும். அவ்வளவு தான் அட்டகாசமான முட்டை சப்பாத்தி தயார். வித்தியாசமான சுவையுடன் இருக்கும், நிச்சயம் ஒரு முறை செய்து பாருங்கள்.