கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டே வருகிறது. இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், பலர் எப்படி கேக் செய்வது? பொருட்கள் வாங்கி கொடுத்து செய்யலாமா, கடையில் விற்பனை செய்வதை வாங்கலாமா என இப்பொழுது யோசிக்க தொடங்கியிருப்பார்கள். ஆனால் அட்டகாசமாக வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி கேக் செய்வது என்பது குறித்து இன்று நாம் பார்க்கலாம்.
முதலில் எடுத்து வைத்துள்ள மைதா மாவை சல்லடையில் நன்றாக சலித்து அதனுடன் பேக்கிங் பவுடர் சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதன் பின் சர்க்கரையை இலேசாக பொடித்து வெண்ணெய் சேர்த்து இரண்டையும் நன்றாக குழைக்கவும். பின் முட்டைகளை உடைத்து நன்றாக நுரை வரும்படி செய்து அந்த நுரைகளை சர்க்கரை கலவையுடன் கலந்து அந்த கலவையை சலித்து வைத்துள்ள மைதா மாவுடன் சேர்த்து நன்றாக விரல்களை வைத்து பிசையவும்.
அதன்பின் சர்க்கரை நன்கு கரைந்ததும் கடைசியாக அந்த மாவில் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கி உடைத்த முந்திரி உலர் திராட்சை சேர்த்து, பேக்கிங் ட்ரேயில் ஊற்றி வீட்டில் ஓவன் இருப்பவர்கள் ஓவனில் வைத்து பேக்கிங் செய்து குறிப்பிட்ட நேரத்திற்கு பின் வெளியில் எடுத்து ஆறிய பின் சாப்பிட்டால் அட்டகாசமான கேக் தயார். வீட்டில் ஓவன் இல்லாதவர்கள் குக்கரில் நியூஸ் பேப்பரை வட்டமாக வெட்டி அதில் லேசாக எண்ணெய் ஊற்றி, கலக்கி வைத்துள்ள மாவை இரண்டு இன்ச் அளவிற்கு ஊற்றி குக்கர் மீது வெயிட் வைத்து 15 நிமிடம் கழித்து இறக்கினால் பேக்கிங் செய்வது போல அட்டகாசமான கிறிஸ்துமஸ் கேக் கிடைக்கும்.
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…