உலகம் முழுவதும் ஸ்மோட்டோ,டிஸ்னி+ஹாட்ஸ்டார், பிஎஸ்என், ஸ்டீம் உள்ளிட்ட முக்கிய இணைய சேவை முடங்கியது.
உலகெங்கிலும் உள்ள பல பயனர்களுக்கு ஸ்மோட்டோ, பேடிஎம், டிஸ்னி ஹோஸ்டார், சோனி எல்ஐவி, பேடிஎம், பிளேஸ்டேஷன் நெட்வொர்க் (பிஎஸ்என்) மற்றும் ஸ்டீம் உள்ளிட்ட இணைய சேவைகள் முடங்கியது. செயலிழப்புகள் பற்றி புகாரளிக்கத் தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இணைய உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நிறுவனமான அகமாய் (Akamai) இணைய சேவை முடக்கத்தை உறுதிப்படுத்தியது.
இதுப்பற்றி இணையத்தளங்களின் நிகழ்நேர தகவல்களை வழங்கும் நிறுவனமான டவுன் டிடெக்டர் (downdetector.in) கூற்றுப்படி, இன்று (வியாழக்கிழமை) இரவு 8.55 மணியளவில் இணைய சேவை முடங்கியதாக தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பு இரவு 10.20 மணியளவில், மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் என அகமாய் தொழில்நுட்பம் நிறுவனம் தெரிவித்தது. இந்த பாதிப்பு ஏற்பட்ட ஐந்து நிமிடங்களில், ஸ்மோட்டோ மட்டும் அணுக முடியாதவர்களிடமிருந்து 3,000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இணைய சேவை முடக்கத்தில் சில என்.டி.டி.வி தளங்களும் பாதித்துள்ளன. இதுகுறித்து, அகமாய் நிறுவனம் 30 நிமிடங்களுக்குள் இயல்பு நிலை திரும்பும் என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது. டவுன் டிடெக்டரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட சில தளங்களில் பிரபலமான கேமிங் சேவைகள் ஸ்டீம், பிஎஸ்என், டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஜீ 5 , சோனிலிவ் போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் சோமாடோ, அமேசான், பேடிஎம் போன்ற ஈ-காமர்ஸ் தளங்களும் அடங்கும்.
இரவு 10.20 மணியளவில், செயலிழப்பு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, பெரும்பாலான தளங்கள் இயல்புநிலைக்கு திரும்பியதாகத் தெரிகிறது. இந்த இணைய சேவை முடக்கத்திற்கு என்ன காரணம் என்ற விவரங்கள் தெளிவாக தெரியவில்லை. இதுபோன்ற இணைய சேவை முடக்கம் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த மாதம் 8-ஆம் தேதி பிரபல தளங்களான ரெடிட், ட்விட்ச் மற்றும் அமேசான் போன்றவற்றில் இதுபோன்ற செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
ஜூன் 2021-இல் ஏற்பட்ட செயலிழப்பு ஃபாஸ்ட்லி (fastly.com) நிறுவனத்தின் சி.டி.என் உடனான சிக்கலால் ஏற்பட்டது. இந்த பாதிப்பானது பிரபலமான வலைத்தளங்களுக்கு மட்டுமல்ல என்று அதன் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் இந்த பிரச்னையானது உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் வாடிக்கையாளர்களில் ஒருவர் அமைப்புகளை (Settings) மாற்றியபோது செயலிழப்பு ஏற்பட்டதாகவும், இது உலகளாவிய செயலிழப்புக்கு வழிவகுத்தது என்று ஃபாஸ்ட்லி நிறுவனம் தெரிவித்தது.
இந்த மாத தொடக்கத்தில், அமேசானில் ஒரு பெரிய செயலிழப்பு உலகெங்கிலும் உள்ள பயனர்களை பாதித்தது. இது அமேசான் ஈ-காமர்ஸ் இயங்குதளத்திற்கு மட்டுமல்ல, அதன் AWS இயங்குதளத்தைப் பயன்படுத்தும் ஏராளமான தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
அதற்கு முன்னர், 2020 ஆகஸ்ட்டில், கூகிள் சம்பந்தப்பட்ட பயன்பாடுகளை பயன்படுத்துவதில் ஒரு பெரிய செயலிழப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த செயலிழப்பில், ஜிமெயில், கூகிள் டாக்ஸ், கூகிள் டிரைவ் மற்றும் பிற கூகிள் சேவைகள் அனைத்தும் பல மணிநேரங்களுக்கு முடங்கியது. இந்த பிரச்சினை உலகளவில் பல பயனர்களை பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…