விவசாயிகளுக்கு அதிக அம்சங்களுடன் களமிறங்கும் மஹிந்திரா XP பிளஸ் சீரிஸ் டிராக்டர்.!

Default Image
  • மஹிந்திரா நிறுவனம் இந்த வருட புதிய XP பிளஸ் சீரிஸ் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அதிக செயல்திறன், உறுதியான கட்டமைப்பு, குறைந்த எரிபொருள் தேவை, சிறந்த நம்பகத்தன்மை போன்ற அம்சங்களுடன் வந்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இந்த வருட புதிய XP பிளஸ் சீரிஸ் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறந்த செயல்திறனுடன் கூடிய எரிபொருள் சிக்கனம் கொண்டதாக விவசாயிகளின் ஏற்றவாறு இந்த புதிய மாடல் டிராக்டர். இன்றைய விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அதிக செயல்திறன், உறுதியான கட்டமைப்பு, குறைந்த எரிபொருள் தேவை, சிறந்த நம்பகத்தன்மை போன்ற அம்சங்களுடன் வந்துள்ள, மஹிந்திரா XP பிளஸ் சீரிஸின் 275XP பிளஸ் ELS DI (37 HP) 475 XP பிளஸ் ELS DI (44 HP) மற்றும் 575 XP பிளஸ் ELS DI (47 HP) என்ஜின்கள் கொண்ட இந்த புதிய டிராக்டரின் சிறப்பம்சங்கள்.

இந்நிலையில், மஹிந்திராவின் பூமிபுத்தா சீரிஸ் என்ஜின்கள் 30-50 ஹெச்பி சக்தி கொண்டவைகளாக டிராக்டர் சந்தையில் வெற்றி பெற்று திகழ்கிறது. தற்போது XP பிளஸ் சீரிஸ் அதிகரிக்கப்பட்ட சக்தி கொண்ட எக்ஸ்ட்ரா லாங் ஸ்ட்ரோக (ELS) என்ஜின்களை கொண்டுள்ளதால் அதிக செயல்திறனும் அதிக இழுக்கும் திறனும் (டார்க்) கொண்டுள்ளது.

புதிய டிராக்டர்களின் வெளிப்புறத் தோற்றமும் கருப்பு மற்றும் சில்வர் நிறம் கொண்ட அழகிய ஹெட்லைட்களுடன் வடிவமைத்துள்ளது. இது 6 வருட உத்திரவாதத்துடன், சிறந்த எரிபொருள் சிக்கனம், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் அதிக சொகுசு அம்சங்களுடன் வந்துள்ளது மஹிந்திரா XP பிளஸ் சீரிஸ். மேலும் இந்த டிராக்டர்கள் 49 பைசா குறைவான வட்டி விகிதத்திலும் தவணையில் வாங்குவோருக்கு முதல் தவணை இலவசமாகவும் குறைவான முன் பணம் செலுத்தியும் வாங்கக்கூடிய வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்