இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு

Default Image

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளார்.
இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பொதுஜன  கட்சியின் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்றார்.பின்னர் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்ற நிலையில் அதிபராக பதவியேற்றார்.
இதனால் இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.மேலும் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்தார் ரணில் விக்ரமசிங்கே.
பின்பு இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமனம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் இன்று இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். ராஜபக்சவிற்கு  அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.மகிந்த ராஜபக்ச ஏற்கனவே 2006 முதல் 2015 ஆண்டுகளில் இலங்கையின் அதிபராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்