ராஜபக்சேவை கலங்கடித்த 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சி கடிதம்!

இலங்கையின் பிரதராக பொறுப்பேற்ற மஹிந்தா ராஜபக்சே அண்மையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். அந்த பதிவில் இன்று காலை என்னிடம் வந்த ஒரு கடிதம் என்னை நெகிழ செய்தது. உற்சாகமாக வேலை செய்ய வைத்தது. எனது பணிகளை நினைவு படுத்தியது என பதிவிட்டு இருந்தார்.
அதற்க்கு காரணம், வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட அப்துல்லா என்கிற சிறுவன் பிரதமர் ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதினான். அதில், ‘ தயவு செய்து உங்களால் முடிந்த வரை இயற்கை வளங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள். அதற்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? நம் நாட்டின் எதிர்காலம் உங்கள் கைகளில் தான் உள்ளது.
இலங்கையில் உள்ள அழகான இயற்கை வளங்களையும், கடற்கரையையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுங்கள். அப்போதுதான் இலங்கைக்கு என்னைப்போல ஆண்டுக்கொருமுறை வரும் ஆமைகளும் பாதுகாப்பாக இருக்கும்.’ என எழுதியிருந்தான்.
இதனை மகிழ்ச்சியுடன் இணையத்தில் பகிர்ந்த ராஜபக்சே விரைவில் அச்சிறுவனை நான் சந்திப்பேன் என பதிவிட்டுள்ளார்.