மகாத்மா காந்தியின் அரசியல் தொடக்கம்:
பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் வழக்கறிஞ்சராக பணியாற்றிய மகாத்மா காந்தி 1893ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் செய்தார்.அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது.
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து யாரும் கோர்ட்டில் வாதாடக்கூடாது என புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் காந்தி பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘நீ கறுப்பர்’ என்றும் , ‘வெள்ளையர் இல்லை’ என்றும் காந்தி பயணம் பாதியிலே மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.அதுமட்டுமல்லாமல், தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுகளும் அவருக்கு ஒரு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தென்னாப்பிரிக்காவில் குடியேறிய இந்திய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கினார்.அதற்கு அவரே பொறுப்பாளராகவும் இருந்தார்.1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு சிறை சென்றார் காந்தி.அதை தொடர்ந்து அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்டவர் மகாத்மா காந்தி.பின்பு காந்தி இந்தியா திரும்பிய போது அவருக்கு கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட்டு இறுதில் அரசியலில் ஈடுபட்டார் மகாத்மா காந்தி அவர்கள்.
DINASUVADU