கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன்.!
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனான சதீஷ் துபேலியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார்.
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும் ,மணிலால் காந்தியின் சந்ததியுமானவர் சதீஷ் துபேலியா .இவர் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை ஊடகங்களிலும், குறிப்பாக வீடியோகிராஃபர் மற்றும் புகைப்பட கலைஞராக கழித்த துபேலியா பல சமூக பணிகளை செய்து வருவதுடன் டர்பனுக்கு அருகிலுள்ள பீனிக்ஸ் குடியேற்றத்தில் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட பணிகளை தொடர காந்தி மேம்பாட்டு அறக்கட்டளைக்கு உதவுவதிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தார் .
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அப்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார் .இந்த நிலையில் திடீரென நேற்று மாலை இவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமாகி உள்ளார் .இவர் தனது 66வது பிறந்தநாளை இறந்த 3 நாட்களுக்கு முன்பு கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை சதீஷ் துபேலியாவின் சகோதரியான உமா துபேலியா மெஸ்திரி உறுதிப்படுத்தியுள்ளார்.இவருக்கு கீர்த்தி சுரேஷ் என்ற மற்றொரு சகோதரி உள்ளதும்,அவரும் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது .தற்போது அவருக்கு பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.