மஹாத்மாவும் விடுதலை போராட்ட இந்தியாவும்..!!
தென் ஆப்பிரிக்காவில் இருந்து மஹாத்மா காந்தி இந்திய வந்ததும் இங்கே நடைபெற்றுக் கொண்டு இருந்த இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.
ரௌலட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்க தொடங்கினார். அப்போது 1919ஆம் நடைமுறையில் இருந்த இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு குறைவான அதிகாரமே வகுக்கப்பட்டு இருந்தது உடனே இந்தியர்களுக்கு முழு அதிகாரம் வேண்டும் ,ரௌலட் சட்டத்தை தடை செய்ய வேண்டும் எனவும் , ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராக காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922 ஆம் ஆண்டு தொடங்கினார்.
காந்தி நடத்திய இந்த போராட்டம் ஆங்கில அரசுக்கு எதிராக மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணிப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்களால் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என இந்தியா தேசம் முழுவதும் விடுதலை தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய தேசம் முழுவதும் பரவிய இந்த போராட்டம் வெற்றியடைந்தது.இதன் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார்.
1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் மக்கள் உபயோகிக்கும் உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்களைஆங்கில அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர்.
மஹாத்மா காந்தி நடத்தி இறுதியில் வெற்றி பெற்ற ‘உப்பு சத்தியாகிரகம்’ போராட்டமே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.உப்பு சத்தியாகிரக போராட்டத்தை அடுத்து 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது.
இப்படி வக்கீலாக இருந்து மக்களின் விடுதலைக்காக போராடி தேசத்தின் விடுதலையை வாங்கி கொடுத்த தேசபிதா மஹாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா இன்று.இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது நாமும் கொண்டாடுவோம் , காந்தியின் புகழை மென்மேலும் எடுத்துச் செல்வோம்…
DINASUVADU