பித்தனாக்கும் சித்தன்..சிவராத்திரி..சிறப்பின் மகிமைகள்…அறிவோம்

Default Image

சிவராத்திரி நெருங்கும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வார்கள்.இது வருடத்திற்கு ஒரு முறை என்பதால் தவறாது கலந்து கொண்டு இரவு முழுவதும் சுவாமி தரிசனம் செய்வார்கள்.இவ்வாறு நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் இந்த நாளில் குலத்தெய்வக் கோவில் கூடி தெய்வத்தை வழிபடுவதை வழக்கமாக கொண்டும் இதனை தங்களது வழித்தோன்றலுடன் வழிவழியாக வழிபாடானது நடந்து வருகிறது.

இத்தகைய மகத்துவம் மிகுந்தது சிவராத்திரி.அம்பாளுக்கு நவராத்திரி ஒன்பது நாள் கொண்டாட்டம் என்றால் அய்யனுக்கோ ஒரே ராத்திரி அது சிவராத்திரி என்று கருட புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அருணாசல புராணம், சிவராத்திரி புராணம் போன்ற பல நூல்கள் சிவராத்திரியின் மகிமைகளை எடுத்துக் கூறுகிற.

இந்த நாளில் சிவ ஆலயத்திற்கு சென்றால் ஓராண்டு முழுவதும் சிவபூஜை செய்த புண்ணியம் கிடைக்கும். மாதந்தோறும் சிவராத்திரி வருகிறது என்றாலும் மாசி மாதத்தில் வருவதே மகா சிவராத்திரி ஆகும்.ஓம் நமச்சிவாயா…சிவாயநம என்று சிந்திப்போருக்கு அபாயம்  இல்லை என்பது சான்றோர் வாக்கு.

மகத்துவம் மிகுந்த இந்த சிவராத்திரியன்று தம்பதிகளான கணவன்-மனைவி  இருவரும் அன்று முழுவதும் சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இனிமையாய் திகழும். தம்பதிகள் இடையே  அன்பு அதிகரிக்கும். சிவராத்தி அன்று விரதம் இருந்து வழிபாடு நடத்தினால் எண்ணிலடங்க நற்பலன்களை நல்குவார்.இந்த சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து மகா விஷ்ணு, மகாலட்சுமி மற்றும் சக்கர ஆயுதத்தையும் பெற்றார். இதே விரதம் மூலமாக தான் பிரம்மா கலைமகள் சரஸ்வதியை பெறும் பாக்யம் அடைந்தார். நந்தியம் பெருமான் சிவராத்திரி மகிமையை எடுத்துக் கூறியதை அடுத்து முருகன், சூரியன், சந்திரன், மன்மதன், இந்திரன், அக்னி, குபேரன் ஆகியோர் நல்வரங்களைப் பெற்றார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.

சிவராத்திரி தினத்தில் யாரெல்லாம் சிவ பெருமானை நினைத்து மனம் உருகி கசிந்து வழிபட்டால் அனைத்து இன்னல் களும் நீங்கி மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்