மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மிகவும் சிறப்பானது, இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்கள், இவர்களின் பேச்சு, உணவு முறைகள், சுற்றுலாத்தலங்கள் என அனைத்தும் சிறப்பு தான். இத்தகைய சிறப்புமிக்க இந்த ஊரை தலைநகராக மாற்றி மதுரையை தலைநகராக கொண்டு மதுரை மாவட்டம் ஆங்கிலேயர்களால் 1790ல் மார்ச் 6ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இது குறித்த சிறப்பு தொகுப்பு. மதுரை மாவட்டமானது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மதுரை ஆகும். இது தற்போதையதிண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதராஸ் மாகாணத்தில் இருந்த சில மாவட்டங்களில் மதுரை மாவட்டமும் ஒன்று. இது தற்போது மதுரையை சுற்றியுள்ள திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால் இந்திய விடுதலைக்குப் பிறகு நிர்வாக வசதிக்காக இது பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் மதுரை, உசிலம்பட்டி, மேலூர் என 3 வருவாய் கோட்டங்களாகவும், 11 வருவாய் வட்டங்களாகவும், 51 உள்வட்டங்களாகவும், 665 வருவாய் கிராமங்களாகவும் பிரித்து நிர்வகிக்கப்படுகிறது.இம்மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 30,41,038. இதில் 15,28,308 பேர் ஆண்கள் மற்றும் 15,12,730 பேர் பெண்கள் ஆவர். இந்த மதுரை மாவட்டம் முதன்முதலில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட தினம் வரலாற்றில் இன்று.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…