வெறித்தனமான தங்க ரதத்தை வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்.!
ஐபிஎல் போட்டிக்காக சென்னை அணி வீரர்கள் உள்ளூரில் பயன்படுத்த இருக்கும் பேருந்தின் புகைப்படத்தை அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம். அதில் தங்க ரத்தத்தில் சிங்கநடை என்று பதிவிட்டுள்ளது.
Thanga Ratham to do the Singa Nadai. The all-new ride of the pride! #StartTheWhistles #EndrendrumYellove ???????? pic.twitter.com/LeCzdaYqt4
— Chennai Super Kings (@ChennaiIPL) March 2, 2020
2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியனான மும்பை, சென்னை அணிகள் முதல் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க பயிற்சி எடுப்பதற்காக சென்னை அணி வீரர்கள் நேற்றிலிருந்து வர தொடங்கினர். அந்த வகையில் மஹேந்திரசிங் தோனி பயிற்சி எடுப்பதற்காக இன்று அதிகாலை சென்னை வந்துவிட்டார் என்பதை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதுபோன்று தற்போது உள்ளூரில் பயன்படுத்த இருக்கும் பேருந்தின் புகைப்படத்தை சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.