ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை தொடர்ந்து ஓடிடியில் நடிகர் கலையரசனின் திரைப்படம் வெளியாகவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு முடிந்த பின்னரும் திரையரங்குகள் திறக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது ஆகும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது .இதனால் பல பிரபலங்களின் படங்களை ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.அதில் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த பல படங்களை OTT platform-ல் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் முதற்கட்டமாக நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியாகவுள்ள பொன் மகள் வந்தாள் படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் கீர்த்தி சுரேஷின் பெங்குயின் படத்தையும், அட்லியின் அந்தகாரம் படத்தையும் அமேசான் பிரேமில் ரிலீஸ் செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தை ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனரான ஜானகிராமன் இயக்கவுள்ள ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ என்ற படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் ஹீரோவாக மெட்ராஸ் பட புகழ் நடிகரான கலையரசன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆனந்தி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் அஷ்னா சவேரி, காளி வெங்கட், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திருகுமரன் என்டர்டெயின்மெண்ட்டுடன் இணைந்து சி. வி. குமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் நிவாஸ். கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். தற்போது தயாரிப்பாளர் பிரபல ஓடிடி தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் ஓடிடியில் ரிலீஸ் செய்யும் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…
சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…