விமானத்தில் தனியாக பயணித்த மாதவன்-வைரலாகும் வீடியோ..!

Default Image

நடிகர் மாதவன் தனி ஒருவனாக விமானத்தில் படப்பிடிப்புக்காக சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் மாதவன் திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆவார். இவர் தற்போது கல்பேஷ் இயக்கி வரும் ‘அம்ரிகி பண்டிட்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருவதால், இவர் கடந்த மாதம் 26 ஆம் தேதி இந்தியாவிலிருந்து துபாய் சென்றுள்ளார்.

அப்போது விமானம் இவருக்கு ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏனென்றால் இந்த விமான பயணத்தில் தனி ஒருவராக மற்ற பயணிகள் யாரும் இல்லாமல் இவர் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணம் இவர் மறக்க முடியாத பயணங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த வீடீயோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, இது வேடிக்கையாக இருந்தாலும், சோகமாகவும் உள்ளது. இந்த நிலைமை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று வேண்டுகிறேன். அப்போது தான் அன்பானவர்கள் அருகில் இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்