அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் மேடலின் ஆலிபிரைட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 85வது வயதில் காலமானார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் அரசாங்கத்தில் 4 ஆண்டுகளாக மேடலின் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார். கிளின்டனின் பதவிக் காலத்தில் அமெரிக்க வரலாற்றில் மிக உயர்ந்த பதவியில் இருந்த பெண் மேடலின் ஆவார்.
இருப்பினும், மேடலினால் ஜனாதிபதி போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இதற்குக் காரணம் அவர் செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர். மேடலின் 1937 மே 15 அன்று செக்கோஸ்லோவாக்கியாவின் தலைநகரான ப்ராக் நகரில் பிறந்தார். அவரது குடும்பம் 1939 இல் சிக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து தப்பி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தது. அந்த நேரத்தில் செக்கோஸ்லோவாக்கியா நாஜிகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.
செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து அகதியாக குடியேறி அமெரிக்காவில் குடியேறிய பிறகும் மேடலின் நிறைய முன்னேற்றம் கண்டிருந்தார். 2012 ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மேடலினுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் கௌரவமான சுதந்திரப் பதக்கத்தை வழங்கி கௌரவித்தார். மேடலின்வாழ்க்கை அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஒரு உத்வேகம் என்று ஒபாமா கூறினார்.
ஆலிபிரைட் அமெரிக்க அரசியலில் வெளிப்படையாகப் பேசுவதற்குப் பெயர் பெற்றவர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை பலமுறை விமர்சித்துள்ளார்.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…