அமெரிக்க முதல் பெண் அமைச்சர் மேடலின் காலமானார்..!

Default Image

அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் மேடலின் ஆலிபிரைட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 85வது வயதில் காலமானார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் அரசாங்கத்தில் 4 ஆண்டுகளாக மேடலின் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார். கிளின்டனின் பதவிக் காலத்தில் அமெரிக்க வரலாற்றில் மிக உயர்ந்த பதவியில் இருந்த பெண் மேடலின் ஆவார்.

இருப்பினும், மேடலினால் ஜனாதிபதி போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இதற்குக் காரணம் அவர் செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர். மேடலின் 1937 மே 15 அன்று செக்கோஸ்லோவாக்கியாவின் தலைநகரான ப்ராக் நகரில் பிறந்தார். அவரது குடும்பம் 1939 இல் சிக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து தப்பி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தது. அந்த நேரத்தில் செக்கோஸ்லோவாக்கியா நாஜிகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.

செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து அகதியாக குடியேறி அமெரிக்காவில் குடியேறிய பிறகும் மேடலின் நிறைய முன்னேற்றம் கண்டிருந்தார். 2012 ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மேடலினுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் கௌரவமான சுதந்திரப் பதக்கத்தை வழங்கி கௌரவித்தார். மேடலின்வாழ்க்கை அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஒரு உத்வேகம் என்று ஒபாமா கூறினார்.

ஆலிபிரைட் அமெரிக்க அரசியலில் வெளிப்படையாகப் பேசுவதற்குப் பெயர் பெற்றவர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை பலமுறை விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்