மடகஸ்கார் நாட்டில், மலேரியாவை கட்டுப்படுத்தும் ஆர்டிமிஸியா எனும் மூலிகை தாவரத்திலிருந்து கண்டறியப்பட்ட மருந்தானது கொரோனவையும் கட்டுப்படுத்துகிறது என அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ராஜொலினா தெரிவித்துளளார்.
உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், கொரோனவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். தடுப்பு மருந்து கண்டறிய இன்னும் பல மாதங்கள் ஆகும் என கூறுகின்றன.
இந்த கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் போட்டியில் கொரோனா கண்டறியப்பட்ட சீனாவும், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவும் முன்னணியில் இருக்கின்றன. அமெரிக்கா இந்த வருட இறுதிக்குள் கொரோனா மருந்து கிடைத்துவிடும் என அறிவித்துள்ளதால் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் மீது உலக மக்கள் கவனம் திரும்பியுள்ளது.
இந்நிலையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் நாட்டில் கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் அறிவித்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மடகஸ்கார் அதிபர் ஆண்ட்ரி ராஜொலினா தெரிவிக்கையில், ‘ மடகஸ்காரில் உள்ள ஆர்டிமிஸியா எனும் மூலிகை தாவரத்திலிருந்து கண்டறியப்பட்ட மருந்தானது மலேரியாவை கட்டுப்படுத்துகிறது. இந்த மருந்து தான் கொரோனவையும் கட்டுப்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார். மடகாஸ்கரில் இதுவரை 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. என தெரிவித்து. அந்த மருந்தையும் மேடையில் குடித்து காண்பித்துள்ளார்.
இந்த மருந்துக்கு கோவிட் ஆர்கானிக்ஸ் என பெயரிட்டுள்ளதாகவும், அந்நாட்டை சேர்ந்த மலகாசி மருத்துவ ஆராய்ச்சி குழுமம் இந்த மருந்தை கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…