சிம்புவின் ஆட்டம் ஆரம்பம் … மாநாடு ரிலீஸ் தேதி…?

மாநாடு திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனி நடிக்கிறார். மேலும் எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாம் லூக் மோஷன் போஸ்டர் என வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகம் ஆகியது என்றே கூறலாம.
இந்த நிலையில் அதனை தொடர்ந்து படத்திற்கான டீசர் வருகின்ற பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி நடிகர் சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று நேற்று நடிகர் சிம்பு தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. ஆம் இந்த மாநாடு திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.