‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றிய லைக்கா.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழக உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி பாகுபலியின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.பான்-இந்தியா படமாக உருவாகும் “ஆர்ஆர்ஆர்”-இல் ராம் சரண், ஜூனியர் என்டிஆர்,ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி , ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கும் இந்த படத்தின் தமிழக உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இதனை லைக்கா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மிகப் பெரிய பான் இந்தியா படமாக உருவாகும் ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழக உரிமையை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர் . விரைவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
We are delighted and proud to announce????
The Tamil Nadu theatrical rights of THE BIGGEST PAN INDIA FILM #RRRMovie is acquired by us…????????@ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @OliviaMorris891 @thondankani @RRRMovie @DVVMovies #RRR pic.twitter.com/ASZsLLVdNT— Lyca Productions (@LycaProductions) February 17, 2021